/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சொந்த வீடு கனவை நனவாக்கும் ரியல் எஸ்டேட்
/
சொந்த வீடு கனவை நனவாக்கும் ரியல் எஸ்டேட்
ADDED : ஆக 31, 2024 05:38 AM

மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்க்கை நடத்திவரும் ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வீடு என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருந்து வருகிறது. மக்களின் சொந்த வீடு கனவுகளை நிறைவேற்றவும், வீடு இல்லாத ஏழை மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காகவே' கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் தமிழக அரசு இலவச வீடுகள் கட்டி வழங்கி வருகிறது.
குறிப்பாக நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்க தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்கள். பாரத பிரதமரும் ஏழை,நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில் மலிவு விலையில் வீடுகள் வழங்க வேண்டும் என பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிவித்து அனைவருக்கும் வீடு என மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றி வருகிறார்.
மத்திய,மாநில அரசுகள் பல சலுகைகள் வழங்கி மக்களுக்கு சொந்த வீடு திட்டத்தை நிறைவேற்றி வரும் நிலையில் பெரும்பாலன மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்குவது நாட்டில் உள்ள அனைத்து ரியல் எஸ்டேட் துறைகளும் கட்டுமான துறைகளும் தான் என்பதில் பெருமையே.
வாங்குவோரின் வசதிக்கேற்ற விலைகளில் மனைகள் , குறைந்த வருவாய் பிரிவினருக்கான சிறிய மனைகள் ,மேலும் அவர்களது மாத வருமானத்திற்குள் தவணை செலுத்தும் முறையில் வங்கி கடன் ஏற்பாடு செய்து வீடுகளை கட்டி கொடுத்து மக்களின் கனவை நனவாக்கி வருவது மேற்கண்ட இரு பெரும் துறைகள் தான்.மேற்கண்ட இரு துறைகளுக்குமே பல இடர்பாடுகள் இருந்து கொண்டுதான் உள்ளது.
குறிப்பாக புதிய மனை பிரிவுக்கான திட்ட அனுமதி , அதற்கான சான்றிதழ்கள் பெறுவதில் காலதாமதம் ,அதற்கான பல நெருக்கடிகள் என சிரமங்களை கடந்து மக்களுக்கு மனைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லம் குறையும் பட்சத்தில் மனைகளின் விலையும் குறையும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். தமிழக அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளதில் குறிப்பாக 2500 சதுர அடி வரையிலான மனையில் தரைத்தளம் முதல்தளம் என 3500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி பெற சுயசான்று அடிப்படையில் இணைய வழியில் பதிவு செய்து வீடுகள் கட்டலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட கட்டட அனுமதி பெற நிர்ணயக்கப்பட்டுள்ள கட்டணத்தொகையை குறைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களின் நலன் காக்கும் அரசால் இன்னும் பல எளிமையான சட்ட திட்டங்கள் நிறைவேறும் என எதிர்பார்ப்போம்.
- எஸ்.சண்முகம்,தலைவர், திண்டுக்கல் மாவட்ட கட்டுமானம்,மனைத் தொழில் கூட்டமைப்பு (CRIC) திண்டுக்கல்.