/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வூசு உமன் லீக் போட்டிகளில் பங்கேற்க வழியனுப்பு நிகழ்ச்சி
/
வூசு உமன் லீக் போட்டிகளில் பங்கேற்க வழியனுப்பு நிகழ்ச்சி
வூசு உமன் லீக் போட்டிகளில் பங்கேற்க வழியனுப்பு நிகழ்ச்சி
வூசு உமன் லீக் போட்டிகளில் பங்கேற்க வழியனுப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 09, 2024 05:16 AM

திண்டுக்கல், : தென்னிந்திய கேலோ இந்தியா வூசு உமன் லீக் போட்டி ஜூன் 10 ல் கர்நாடக பாகல்கோட்டில் நடக்கிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 11 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. செப்.ல் இந்தோனேஷியாவில் நடக்க இருக்கும் 9 வது ஜூனியர் வூசு உலக போட்டிக்கான தகுதி தேர்வும் ஜூன் 14,15ல் நடக்கிறது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் ஸ்ரீ,ஜீவா பங்கேற்கிறார்கள். இவர்களுக்கான வழியனுப்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் ஜாக்கி சங்கர் வரவேற்றார். கால்பந்து சங்க செயலாளர் சண்முகம்,திண்டுக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார்,டாக்டர் ஸ்ரீநாத்,கோச் டபிகுரு வாழ்த்தி அனுப்பினர். வூசு சங்க பொருளாளர் கவிதா நன்றி கூறினார்.