/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி கிடந்த அத்திகுளம் சீரமைப்பு
/
பராமரிப்பின்றி கிடந்த அத்திகுளம் சீரமைப்பு
ADDED : மே 02, 2024 06:16 AM

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியால் அத்திகுளத்துபட்டியில் பராமரிப்பின்றி கிடந்த அத்திகுளத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி நடக்கிறது.
வடமதுரை பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் அத்திக்குளத்துபட்டி அருகில் உள்ளது அத்திகுளம்.
பேரூராட்சி 3வது வார்டு பகுதிக்குள் இருக்கும் அத்திகுளம் 44 ஏக்கர் பரப்பில் உள்ளது. கரிவாடன்செட்டிபட்டி, அப்பிநாயக்கன்பட்டி பகுதி தரிசு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஒரு ஓடை வழியாக அத்திகுளத்திற்கு நீர் வந்து சேர்கிறது. இக்குளத்தை சார்ந்து 50 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் நிலங்கள் உள்ளன. இதன் மறுகால் நீர் நரசிங்கபுரம், பம்புரெட்டி, வடமதுரை மந்தை குளங்களுக்கு சென்றடையும்.
இக்குளத்தின் நீர்வரத்து வாய்க்கால், நீர்பிடிப்பு பகுதி, கரை பராமரிப்பின்றி கிடந்தது குறித்து தினமலர் நாளிதழில் கண்மாய் காப்போம் பகுதியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வடமதுரை பேரூராட்சி மூலம் ரூ.38 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி நடக்கிறது. குளம் சீரமைப்பிற்கு உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி கூறினர்.

