ADDED : ஆக 15, 2024 05:33 AM

தாண்டிக்குடி : தினமலர் செய்தி எதிரொலியாக தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சீர்செய்ய மின் பாதையில் உள்ள இடையூறுகள் அகற்றும் பணி துவங்கியது.
இம்மலைப் பகுதிக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு,செம்பட்டி என மூன்று மின் சப்ளைகள் உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கீதா உத்தரவில் வத்தலக்குண்டு செயற்பொறியாளர் கருப்பையா தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என 70-க்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு வத்தலக்குண்டு பண்ணைக்காடு உயர் மின்னழுத்த பாதையில் உள்ள இடையூறுகள், மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' முதற்கட்டமாக வத்தலக்குண்டு மின்பாதையில் இடையூறுகள் அகற்றப்பட்டுள்ளது.
இம்மலைப் பகுதிக்கு மேலும் மின்சப்ளை அளிக்கும் செம்பட்டி ,கொடைக்கானல் மின் பாதையில் உள்ள இடையூறுகளையும் ஒரு வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கை தொடரும்'' என்றார்.