நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் பஸ் ஸ்டாண்ட்,மதுரை ரோடு,பழநி ரோடு,நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அனுப்பபட்டது.
கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நேற்று மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் நகரில் எங்கெல்லாம் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோ அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ரோட்டோர கடைகளின் போர்டுகள்,படிக்கட்டுகளையும் அதிகாரிகள் அகற்றினர்.