sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

/

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 13, 2024 05:45 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை த்தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்) , நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரன்,உதவி பொறியாளர் பாண்டித்தாய், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், வருவாய் அலுவலர் உமா கணபதி, நகர்கல அலுவலர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்


ராசு (அ.தி.மு.க.,): வார்டில் பொதுக் குழாயை அமைத்து தர வேண்டும்

தலைவர்: ஜிகா திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளதால் பொதுக்குழாய் அமைக்க முடியாது.

உதவி பொறியாளர்: லாரிகளில் தண்ணீர் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரமணி (தி.மு.க.,): இட்டேரி ரோட்டில் சாக்கடை மீது கல்வெட்டுகள் அமைக்கப்படுகிறது நகராட்சி அனுமதி பெற்று உள்ளதா.

தலைவர்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

ஆறுமுகம் (அ.தி.மு.க.,): துாய்மை பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளது

தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

நடராஜ் (அ.தி.மு.க.,): நகராட்சி சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

நகரமைப்பு அலுவலர்: ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நடராஜ் (அ.தி.மு.க.,) : சைதா ராவுத்தர் குட்டை பகுதி குறித்து பல்வேறு தகவல்கள் பரவுகின்றன இதுகுறித்து விளக்கம் தேவை.

நகர அமைப்பு அலுவலர்: தவறான தகவல் பரவி வருகிறது.

சாகுல் ஹமீது (தி.மு.க.,): ஜிகா பைப்லைன் அமைக்க செலவிடப்பட்ட விவரங்கள் தேவை.

உதவி பொறியாளர்: முழு விபரங்கள் தரப்படும்.

சாகுல் ஹமீது (தி.மு.க.,): தெரு விளக்குகள் மாலை 5:00 மணி முதல் காலை 7 :00மணி வரை எரிவதால் மின்சார செலவு ஏற்படுகிறது.

உதவி பொறியாளர்: தெரு விளக்குகள் மாலை 6:00 முதல் காலை 6:00 மணி வரை எரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பத்மினிமுருகானந்தம் (காங்.,): திருவள்ளுவர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா

நகர அமைப்பு அலுவலர்: எதிர்தரப்பினர் நீதிமன்றம் மூலம் தடை ஆணைப் பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

செபாஸ்டின் (தி.மு.க.,): திருவள்ளுவர் சாலையில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன .

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us