/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : மார் 13, 2025 05:44 AM

வடமதுரை: வடமதுரை அருகே நெடுஞ்சாலையில் கீழ்பகுதியில் செல்லும் காவிரி நீர் குழாய் உடைப்பால் ரோடு சேதமடைந்து விபத்து ஆபத்தாக மாறிய பகுதி தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோடு குறுகியதாக இருந்தபோது ரோடு விளிம்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக பல இடங்களில் காற்று போக்கிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த ரோடு அகலமானபோது பல இடங்களில் காற்று போக்கி கட்டமைப்புகள் அகற்றப்பட்டது. இதனால் பல இடங்களில் ரோட்டின் கீழ் செல்லும் குழாய் பாதையில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் தென்னம்பட்டி கெச்சானிப்பட்டி இடையே புதிதாக ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்து ரோட்டில் பள்ளம் ஏற்பட்டதால் விபத்து அபாயம் உருவானது.
இதன் செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.இதையடுத்து நேற்று குடிநீர் வாரியத்தினர் ரோட்டை தோண்டி குழாய் உடைப்பை சீரமைத்தனர்.