/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்கள் சீரமைப்பு
/
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்கள் சீரமைப்பு
ADDED : செப் 04, 2024 07:02 AM
திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதை சில மாதங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மழை நேரங்களில் மழைநீர்,கழிவுநீர் சேர்ந்து குளம்போல் தேங்குகிறது. தண்ணீர் எப்போதும் தேங்கியே இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது ரோடு பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை 5:00 மணிக்கு பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து சேதமான பள்ளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாலத்திற்குள் கழிவுநீர் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.