ADDED : ஏப் 26, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : முருநெல்லிக்கோட்டை தீர்த்தாக்கவுண்டனுாரை சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல்.
இவரது தோட்டத்து கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்ற மயில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது.
இதை வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் மயிலை மீட்டனர்.
இதை அய்யலுார் வன அலுவலர் சங்கரிடம் ஒப்படைத்தனர்.

