/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊதியம் காலதாமதத்தால் 'ரிசர்வ்' அலுவலர்கள் ‛டென்ஷன்'; மறியல்
/
ஊதியம் காலதாமதத்தால் 'ரிசர்வ்' அலுவலர்கள் ‛டென்ஷன்'; மறியல்
ஊதியம் காலதாமதத்தால் 'ரிசர்வ்' அலுவலர்கள் ‛டென்ஷன்'; மறியல்
ஊதியம் காலதாமதத்தால் 'ரிசர்வ்' அலுவலர்கள் ‛டென்ஷன்'; மறியல்
ADDED : ஏப் 20, 2024 05:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டு சாவடி பணிக்காக நியமிக்கப்பட்ட ரிசர்வ் அலுவலர்களுக்கான பணி ஊதியம் வழங்க வருவாய் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் ,அலுவலர்கள் டென்ஷன் ஆகினர். நத்தத்தில் மறியலில் ஈடுபட அவர்களுக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டது.
மாவட்டத்தின் ஓட்டுச்சாவடியில் முதன்மை அலுவலர், இணை அலுவலர், மூன்று நிலை பதிவு அலுவலர்கள் என்ற பிரிவில் தேர்தல் பணியாற்றினர். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உடல்நிலை, சூழல் வாரியாக இடர்பாடு ஏற்பட்டால் அந்த பணியை தொடர ரிசர்வ்' அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த ஏரியா தாலுகா அலுவலகங்களில் தயார் நிலையில் இருந்தர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பணி ஊதியமானது வருவாய் துறையின் மண்டல அலுவலர் மூலமாக வழங்கப்படுகிறது. நேற்று (ஏப்.19) தேர்தல் பணிக்கான ரிசர்வ் அலுவலர்களுக்கு பணி முடிந்த நிலையில் ஊதியம் தருவதில் முதன்மை அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். இதில் கொதிப்படைந்த அலுவலர்கள் ஆங்காங்கு விவாதத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்துாரில் ஓட்டு சாவடிக்கான ரிசர்வ் அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஊதியம் வழங்க தாமதமானதால் சர்ச்சை உருவானது.
நத்தம் : இது போல் நத்தம் பகுதியில் நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பி1,பி2,பி3 வகை அலுவலர்களுக்கு 5 நாள் தேர்தல் பணிகளுக்கு ரூ.1300, அதிகாரிகளுக்கு ரூ.1700 என பயணப்படி , உணவுப்படி வழங்க வேண்டும்.
இது தேர்தல் பணிகள் முடிந்தவுடன் வழங்கப்படும். ஆனால் நத்தம் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் உட்பட்ட அலுவலர்களுக்கு இந்த பணம் வழங்க கால தாமதம் ஆனது.
ஆத்திரமடைந்த அலுவலர்கள் நத்தம் தாலுகா அலுவலகம் எதிரே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

