/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
/
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
ADDED : மார் 09, 2025 05:02 AM

திண்டுக்கல்: திறந்த வெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு, தெருவிளக்குகள் இன்றி இருள் என திண்டுக்கல் மாநகராட்சி 11 வது வார்டு மக்கள் எண்ணிலடங்கா பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
மவுன்ஸ்புரம் 1 முதல் 6 தெருக்கள்,கச்சேரி தெரு,மேற்கு ரதவீதி,கொத்தனார் தெரு,வடக்கு ரதவீதி,தாலுகா ஆபிஸ் ரோடு,குருசாமி பிள்ளை சந்து, கோயில் தெரு, சன்னதி தெரு, லயன்தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் கச்சேரி தெருவில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடமாடும் கழிப்பறைகளை அதிகாரிகள் ஏற்படுத்தினர். அதையும் சிலர் மதுபோதையில் சேதப்படுத்திவிட்டனர்.
மக்கள் குப்பையை தெருவில் கொட்டுகின்றனர். அதை மாநகராட்சி ஊழியர்கள் சிறிது சிறிதாக அள்ளி செல்லும் நிலையும் தொடர்கதையாகிறது.டாஸ்மாக் செயல்பாட்டில் இருப்பதால் அதிகமானோர் இரவில் இருள் சூழ்ந்த இப்பகுதிகளில் குவிந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கம்பங்கள் சேதமாகி சாய்ந்தநிலையில் உள்ளன.ரோடுகள் மண் தரைகளாக உள்ளன. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிகாரிகள் தெருவிளக்குகளை முறைப்படுத்த வேண்டும்.
எங்கும் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. திடீரென இவைகள் ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகளை முட்டி தாக்குகின்றன. ரோடுகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது.
குப்பையால் சுகாதாரகேடு
வெங்கடேஷ், கச்சேரி தெரு: கச்சேரி தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவில் பலரும் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர்.
பெண்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் அதன் அருகிலிருப்பதால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். குப்பைகளையும் அப்படியே கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சமூக விரோதிகளால் அவதி
சுந்தரி, மார்கெட் ரோடு: டாஸ்மாக் செயல்பாட்டில் இருப்பதால் அதிகமானோர் இரவில் இருள் சூழ்ந்த இப்பகுதிகளில் குவிந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கம்பங்கள் சேதமாகி சாய்ந்தநிலையில் உள்ளன.ரோடுகள் மண் தரைகளாக உள்ளது. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிகாரிகள் தெருவிளக்குகளை முறைப்படுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
மாரியம்மாள், கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்) : 11வது வார்டு கச்சேரி தெருவில் குப்பை கொட்டப்படுவது, அசுத்தம் செய்வது குறித்து புகார் அளிக்கப்பட்டு மாற்று நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் எல்லா நேரங்களிலும் நிறுத்தி லோடுகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கும் புகார் அளித்துள்ளோம். அவ்வப்போது கவனத்திற்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.