/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை தேக்கத்தால் கொசுக்கள், முழுமையடையாத ரோடுகள் சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்
/
சாக்கடை தேக்கத்தால் கொசுக்கள், முழுமையடையாத ரோடுகள் சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்
சாக்கடை தேக்கத்தால் கொசுக்கள், முழுமையடையாத ரோடுகள் சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்
சாக்கடை தேக்கத்தால் கொசுக்கள், முழுமையடையாத ரோடுகள் சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்
ADDED : மே 26, 2024 04:53 AM

திண்டுக்கல்: துார்வாராமல், பராமரிக்காமல் மண் நிரம்பி தேங்கி நிற்கும் சாக்கடைகள், தெருநாய்கள் தொல்லை, முழுமையாக போடப்படாத ரோடுகள் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டு மக்கள்.
கிழக்கு கோவித்தாபுரம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு, அஞ்சுகம் தெரு, பள்ளிவாசல் தெரு என பல்வேறு பகுதிகளை உள்ளிட்டக்கிய இந்த வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பல உள்ளன. சாக்கடை எதுவுமே துார்வாரப்படவில்லை. அனைத்தும் மண் நிரம்பி கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் ரோடுகளில் கழிவுநீர் வெள்ளம் போல் ஓடும் நிலை ஏற்படுகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படுகிறது.
கொசுத்தொல்லைக்கு பஞ்சம் இல்லை. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை என்ற புகார் பிரதானமாக கேட்க முடிகிறது. நாயக்கர் புதுத்தெருவில் புதிதாக ரோடு போட தயார் செய்யப்பட்டு அப்படியே கிடக்கிறது. இங்குள்ள சிறு கற்களால் வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழும் நிலை உள்ளது. தினமும் 5 பேராவது விழுகின்றனர்.
வெளியே நடமாட முடியாத அளவிற்கு தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி மக்களை அச்சுறுத்துகிறது. இரவில் டூவீலர்களில் செல்பவர்களை கடிக்கும் நிலையும் தொடர்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதை போல் இங்கேயும் தடுப்பூசி செலுத்துவதோடு கருத்தடை செய்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் என்பது பெரும்பாலும் இல்லை. முக்கியமான பகுதி என்பதால் இங்கு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.
சாக்க டைகளை சீரமையுங்க
சதீஷ்குமார், சமயபுரம் மாரியம்மன் கோயில் தெரு : சாக்கடைகளில் கழிவு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள், கோயிலுக்கு வருவோர் என பலரின் பயன்படுத்தும் பகுதியாக இது உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பல்வேறு தொய்வுகள் உள்ளன. போடப்பட வேண்டிய ரோடுகளை விரைந்து முடிப்பதோடு தெரு விளக்குகள் அதிக்கப்படுத்திட வேண்டும். அடிப்படை வசதிகளை மக்களிடம் கேட்டறிந்து சரிசெய்ய வேண்டும் .
தண் ணீர் பிரச்னை உள்ளது
மணிகண்டன், காமராஜர் தெரு : முன்பு பெரிய தண்ணீர் தொட்டிகள் இருந்தன. தற்போது சிறிய தொட்டிகளாக உள்ளதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. 3 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் தான் தண்ணீர் வருகிறது. சில இடங்களில் குடிநீர் குழாய்கள் இல்லை. இதை அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பழமையான சமயபுரம் மாரியம்மன் கோயிலை சீரமைக்க வேண்டும். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இது போன்ற சிறிய கோயில்களை கவனிக்க வேண்டும்.
நாய் கள் தொல்லை தாங்கல
ஜானகி, அஞ்சுகம் தெரு: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ரோட்டில் செல்ல அச்சப்படும் அளவிற்கு நாய்கள் தொல்லை உள்ளது. இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோரை பாடாய்படுத்துகிறது. அதிகாரிகள் மற்ற பகுதிகளில் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதை போல் எங்கள் பகுதிகளில் உள்ள நாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
விரை வில் ச ரி செய்யப்படும்
ரவிச்சந்திரன், கமிஷனர் : கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்பட்டு இதர குறைகளும் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.