/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துங்க ஓய்வூதியர் ஆண்டு விழாவில் தீர்மானம்

ADDED : ஆக 25, 2024 05:02 AM
வேடசந்துார்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் வேடசந்துார் வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா , பொதுக்குழு கூட்டம் நிறைவேற்றப்பட்டன.
இச்சங்க 35 வது ஆண்டு விழா ,பொதுக்குழு கூட்டத்திற்கு வட்டத் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தார். வட்ட துணைத்தலைவர் தங்கவேலு வரவேற்றார். வட்ட செயலாளர் மருதையப்பன் ஆண்டறிக்கை, பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தனர்.
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம், மாநில செயலாளர் முத்துக்குமரவேலு பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க துணைச் செயலாளர்கள் ராஜாசண்முகம், லுார்து ராஜ், சுந்தரராஜ், மாவட்டத் தலைவர் பொன்னையா, வாசன் கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மனோரஞ்சன், உதவிக்கருவூல அலுவலர் சித்ரா, ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் சுபதேவி, ஸ்டேட் பேங்க் மேலாளர் சதீஷ், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் பேசினர். வட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.