/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பழிக்கு பழியாக கொலை
/
திண்டுக்கல்லில் பழிக்கு பழியாக கொலை
ADDED : ஜூலை 07, 2024 10:57 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த கூலித் தொழிலாளியை பழிக்குப் பழியாக மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர்.,நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வினோத்30. இவர் 2020ல் திண்டுக்கல்லை சேர்ந்த சுள்ளான் ரமேஷ், என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் சில தினங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இரவு 9:00 மணிக்கு வினோத், வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கே வந்த மர்ம கும்பல் அரிவாளால் வினோத்தை, வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பினர். தகவலறிந்த தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுள்ளான் ரமேஷ், என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய வினோத்தை, ரமேசின் கூட்டாளிகள் பழிக்குப் பழியாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மேல் விசாரணையை துவக்கியுள்ளனர்.