ADDED : செப் 04, 2024 06:53 AM

திண்டுக்கல் : ஓய்வு ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மாதந்தோறும் ரூ.497 புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பாலிசி தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. அரசாணைப்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி .தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு சங்க மாவட்டத்தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்pரன் வரவேற்றார். அனைத்துதுறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ,மாவட்டச் செயலாளர் அமல்ராஜ்,முன்னாள் மாவட்டத்தலைவர் சுந்தரம் , முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் பேசினர். பொன்ராஜ் நன்றி கூறினார்.