sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுாரில் ரோடு அகலமாகியும் இடைவிடாத விபத்துக்கள்

/

அய்யலுாரில் ரோடு அகலமாகியும் இடைவிடாத விபத்துக்கள்

அய்யலுாரில் ரோடு அகலமாகியும் இடைவிடாத விபத்துக்கள்

அய்யலுாரில் ரோடு அகலமாகியும் இடைவிடாத விபத்துக்கள்


ADDED : மே 10, 2024 05:55 AM

Google News

ADDED : மே 10, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுாரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அகலப்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் விபத்துகள் நடக்கின்றன. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யலுார் பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் பஞ்சம்தாங்கி, காக்காயன்பட்டி, ஏ.கோம்பை, தெற்கு முடக்கு, குப்பாம்பட்டி, பாலத்தோட்டம், கிணத்துபட்டி, செங்குளத்துபட்டி, கணவாய்பட்டி போன்ற கிராமமக்கள் அய்யலுார் வந்து செல்ல வனத்துறை அலுவலகம் வழியே செல்லும் செந்துறை ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதுதவிர அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருந்தகம், குருந்தம்பட்டி, புத்துார் வழியே ஆலம்பட்டியை இணைக்கும் முக்கிய ரோடும் இதுவே. இதற்கு நேர் எதிர் திசையில் வளவிசெட்டிபட்டி, கடவூர் வழியே கரூரை இணைக்கும் மற்றொரு முக்கிய ரோடும் நான்குவழிச்சாலையில் இருந்து பிரிகிறது. இதனால் இந்த நால்ரோடு சந்திப்பு என்பது ஆபத்தான இடமாக உள்ளது. நாளுக்கு அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அய்யலுாரிலிருந்து கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் ஆட்டோக்கள், டூவீலர்கள் நான்கு வழிச்சாலையை குறுக்கிட்டு கடப்பதை தவிர்க்க எதிர்திசையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் மேம்பால பகுதி அருகில் முடிந்த சர்வீஸ் ரோடு சமீபத்தில் நீடிப்பு செய்யப்பட்டு கடவூர் ரோடு பிரிவு வரை அகலமாக்கப்பட்டுள்ளது.

அகலமாக்கப்பட்ட ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் ஏறுவதை தவிர்த்து இடப்பக்கமாக வாகனங்களை செலுத்தி பின்னர் செந்துறை ரோட்டிற்குள் செல்கின்றனர். இதனால் விபத்து தவிர்க்க அகலமாக்கப்பட்ட ரோட்டில் வேகத்தடையால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க வேகத்தடையை அகற்றிவிட்டு மாற்று பாதுகாப்பு ஏற்பாடாக வெள்ளை நிறத்தில் ரோட்டில் வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோடை அகலமாக்க வேண்டும்


கே.ஆறுமுகம், வர்த்தக சங்கத் தலைவர், அய்யலுார்: நான்குவழிச்சாலையில் சமீபத்தில் திருச்சி திசையில் அகலமாக்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே இருக்கும் சர்வீஸ் ரோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 50 மீட்டர் துாரம் ரோடு அகலமாக்கப்படாமல் துண்டாக விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் நான்குவழிச்சாலையை கடக்காமல் பேரூராட்சி அலுவலக ரோடு வழியே செல்லும் போது அகலம் குறைந்த 50 மீட்டர் துார பகுதியில் எதிர்திசை வாகனங்களுடன் விபத்தில் சிக்கும் வகையில் வாகனங்கள் இடப்பக்கமாக ஏறி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் விபத்து ஆபத்து அதிகமாகிறது. எனவே விடுப்பட்ட பகுதியிலும் ரோடை அகலமாக்க வேண்டும்.

சுரங்கப்பாதை வேண்டும்


வி.கணேஷ்கண்ணா, காங்., வர்த்தக பிரிவு மாநில செயலாளர், அய்யலுார்: அய்யலுார் வனத்துறை அலுவலகம் இருக்கும் ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இதன் நீடிப்பை நான்குவழிச்சாலையை கடந்து கடவூர் ரோடு வரையும் நீடித்தால் போக்குவரத்தும் சுலபமாகும். நால் ரோடு சந்திப்பு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். களர்பட்டியில் இருந்து ரயில்வே பகுதி வழியே செல்லும் தடத்தை மேம்படுத்தி தந்தால் பொதுமக்களுக்கு உதவியமாக இருக்கும். அவசர காலங்களில் ரயில்வே துறையினருக்கும் உபயோகமானதாக இருக்கும்.

இங்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக பாதை அமைக்கும் நோக்கில் பெருமளவில் நிலம் கையகம் செய்து இழப்பீடு வழங்கும் பணியும் நிறைவு பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.

இருளாக உள்ளது


வி.சந்திரசேகர், வியாபாரி, அய்யலுார்: கடவூர் பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. விபத்து தடுப்பு நடவடிக்கையாக வைக்கப்பட்டுள்ள 'பேரி கார்டு'கள் கார், டூவீலர் போன்ற சிறிய வாகனங்களை முழுவதுமாக மறைக்கும் வகையில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதே போல திருச்சி திசையில் மேம்பாலத்தின் சரிவு பகுதி முடியும் இடத்தில் இருக்கும் மயானத்திற்கு ஆபத்தான முறையில் கடக்கும் நிலை உள்ளது.

இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து கடவூர் ரோடு சந்திப்பு தாண்டி ரோட்டை கீழே இறக்க வேண்டும். திருச்சி திசையில் கிழக்கு திசையில் அகலமாக்கியது போல சர்வீஸ் ரோட்டை மேற்கு திசையிலும் அகலமாக்கி கடவூர் ரோட்டுடன் இணைக்க வேண்டும். 'சப் வே' அருகில் களர்பட்டி பிரிவு உயர்மட்ட விளக்குகளில் கடைவீதி திசையில் இருக்கும் விளக்குகளை எரிய வைப்பது இல்லை. இதனால் இப்பகுதி இருளாக உள்ளது.

தெருவிளக்குகள் வேண்டும்


ஆர்.கருப்பன்,பேரூராட்சி தலைவர், அய்யலுார்: அய்யலுாரின் நடுவே விபத்துகளை தவிர்க்க நான்குவழிச்சாலையில் மேம்பாலம், இரு பக்கமும் சர்வீஸ் ரோடுகளும், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சர்வீஸ் ரோடு நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியில் தெருவிளக்கு வசதி இன்றி விபத்து அபாயம் உள்ளது. மேலும் கடவூர் பிரிவு வரை மேற்குபகுதியிலும் சர்வீஸ் ரோடை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து கடவூர் பிரிவு பகுதியிலும் சுரங்கப்பாதை அமைக்க நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேரூராட்சி மன்றம் சார்பில் வலியுறுத்துவோம்.






      Dinamalar
      Follow us