ADDED : மே 05, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுாரில் களர்பட்டி, குறிஞ்சி நகர் இடையே பேரூராட்சி சார்பில் சாக்கடையுடன் பேவர் பிளாக் ரோடு பணி துவங்கியது.
இடைப்பட்ட பகுதி தனியார் பட்டா நிலம் எனக்கூறி தடுத்ததால் பணி பாதியில் நிற்கிறது. அதிருப்தியான இப்பகுதியினர் ரோடு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி குறிஞ்சி நகர் பகுதியில் ரோடு மறியல் செய்தனர். வடமதுரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், ஆர்.ஐ., ரமீஜா பானு, பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.