/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணம் செலுத்தியும் நோட்டீஸ் சாலை பணியாளர்கள் முற்றுகை
/
பணம் செலுத்தியும் நோட்டீஸ் சாலை பணியாளர்கள் முற்றுகை
பணம் செலுத்தியும் நோட்டீஸ் சாலை பணியாளர்கள் முற்றுகை
பணம் செலுத்தியும் நோட்டீஸ் சாலை பணியாளர்கள் முற்றுகை
ADDED : பிப் 23, 2025 06:18 AM
வேடசந்துார் : வேடசந்துார் சிக்கன நாணய கடன் சங்கத்தில் கடன் வாங்கி செலுத்தியவர்களுக்கு பணம் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பியதால் சாலை பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்துார் எஸ்.ஏ.பி., நகரில் ஒன்றிய கூட்டுறவு நாணய கடன் சங்கம் உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள், சாலை பணியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
சாலை பணியாளர்கள் 11 பேர் கடன் வாங்கி செலுத்தி விட்டனர். அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளனர். இவர்களுக்கும் கடனை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆத்திரமடைந்த ஊழியர்கள் கூட்டுறவு நாணய கடன் சங்கம் சென்று முற்றுகையிட்டனர்.
சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் கூறியதாவது : எங்களது சங்கத்தை சேர்ந்த 11பேர் வாங்கிய கடனை செலுத்திய நிலையில் பணம் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பங்குத்தொகை கணக்கில் இருப்பதாக தெரியவில்லை. அதிகாரிகள் இல்லாததால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். முறையான பேச்சு வார்த்தை நடைபெறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றார்.

