/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
-பன்றிமலை ரோட்டில் பாறை உருண்டு பாதிப்பு
/
-பன்றிமலை ரோட்டில் பாறை உருண்டு பாதிப்பு
ADDED : டிச 14, 2024 02:20 AM

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள் ஆங்காங்கு உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தருமத்துப்பட்டியிலிருந்து பாண்டி மலை செல்லும் ரோட்டில் அமைதிச்சோலை அடுத்த 4வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
பாறை கற்களும் ஆங்காங்கு ரோட்டில் உருண்டு வந்து விழுந்தன. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று நிலச்சரிவு பகுதிகளில் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது. இங்குள்ள கோம்பை நீர்த்தேக்க வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி கண் பாலத்தில் அடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சுரக்காய்பட்டி வழியாக உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்தது.
சுரக்காய் பட்டி கிராம மக்கள் எஸ். பாறைப்பட்டி வழியாக சுற்றி செல்ல வேண்டியிருந்தது. பின்னர் இயந்திரங்கள் மூலம் கண் பாலத்தின் அடைப்புகளை சீரமைக்கும் பணியும் நடந்தது.

