/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலக்காடு ரயிலில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
/
பாலக்காடு ரயிலில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
ADDED : மார் 23, 2024 01:53 AM
ஒட்டன்சத்திரம்,:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயிலில் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
ஒட்டன்சத்திரம் அருகே அரண்மனைபுதுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் 26. இவரும் அதை ஊரைச் சேர்ந்த தேன்மொழியும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தேன்மொழியின் பெற்றோர் கோவையைச் சேர்ந்த உறவினர் முரளிக்கு அவரை 2020ல் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பின்பும் மணிகண்டனும், தேன்மொழியும் தினமும் அலைபேசியில் பேசி வந்தனர். இதை அறிந்த கணவர் முரளி தேன்மொழியை எச்சரித்துள்ளார். தேன்மொழி பெற்றோரிடமும் இதை தெரிவித்துள்ளார். கணவர் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் மார்ச் 17 மணிகண்டனுடன் தேன்மொழி மாயமானார். நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்சத்திரம் அருகே பாலக்காட்டிலிருந்து சென்னை சென்ற ரயிலில் பாய்ந்து 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

