/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் வீசும் ஆடி காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு
/
பழநியில் வீசும் ஆடி காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு
பழநியில் வீசும் ஆடி காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு
பழநியில் வீசும் ஆடி காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு
ADDED : ஜூலை 26, 2024 11:55 PM
பழநி:ஆடி காற்று பலத்த வேகமாக வீசுவதால் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவையில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது.
பழநி முருகன் கோயிலுக்கு செல்ல வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன. ரோப்காரில் 3 நிமிடங்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியும். காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இயங்காத வகையில் அதில் பாதுகாப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது ஆடி காற்று பலமாக வீசுவதால் அடிக்கடி ரோப்கார் சேவை பாதிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் பக்தர்களின் பாதுகாப்பு கருவி ரோப் கார் நிறுத்தப்படுகிறது. நேற்று அதிக நேரம் பலத்த காற்றால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை, வின்ச் சேவையை பயன்படுத்தினர்.