/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
/
பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
ADDED : பிப் 28, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்ல பயன்படும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்புப்பணிக்காக இன்று (பிப்., 28 ) நிறுத்தப்படுகிறது.
இங்கு இக்கோயிலுக்கு சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதைகள் உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடங்களில் செல்ல முடியும். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடப்பதால் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் வின்ச், படி மற்றும் யானைப்பாதைகளை பயன்படுத்தலாம்.