/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி: திண்டுக்கல்லில் ஒருவர் கைது

ADDED : ஆக 15, 2024 01:19 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி பங்குதாரருக்கு தெரியாமல் அவர்போல் போலி கையெழுத்திட்டு தனியார் வங்கிகளில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் கல்பனா 45,ரவிக்குமார் 51, இவரது மனைவி தீபா 48, ஆகியோர் சேர்ந்து திண்டுக்கல் நத்தம் ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தினர்.
மூவரும் பங்குதாரர் என்பதால் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டும். ஆனால் ரவிக்குமார், தீபா ஆகியோர் கல்பனாவுக்கு தெரியாமல் அவர் போல் கையெழுத்திட்டு அவரது பெயரிலே திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டனர்.
2023ல் இந்த விவகாரம் கல்பனாவிற்கு தெரிந்தநிலையில் அவர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். நேற்று திண்டுக்கல் -பழநி ரோட்டில் உள்ள தன் வீட்டில் பதுங்கியிருந்த ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தீபாவை தேடுகின்றனர்.