/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.1473 கோடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறுவிறு
/
ரூ.1473 கோடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறுவிறு
ரூ.1473 கோடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறுவிறு
ரூ.1473 கோடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறுவிறு
ADDED : ஆக 31, 2024 05:54 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1473 கோடியில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமெடுத்துள்ளது.இதில் ஒரு திட்டம் 2025 மார்ச்,மற்றொன்று இந்தாண்டிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், வடமதுரை, வேடசந்துார் பேரூராட்சி, திண்டுக்கல் மாநகராட்சியில் 5.31 லட்சம் மக்கள் பயனடைவர்.
ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் என தினமும் 23.38 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் நடக்கிறது.
40 தரைதளம், 220 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 962 கி.மீட்டரில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளது. 71.35 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
மார்ச் 2025 ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சி கீரனுார்,நெய்காரப்பட்டி பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம் ரூ.823.00 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டம் நாளொன்றுக்கு 43.69 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இதற்காக நீரேற்றுக் குழாய் 100.40 கி.மீட்டர் நீளம், 2 நீருந்து நிலையங்கள், 56 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், 172 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், பகிர்மான குழாய்கள் என பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
48,700 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படஉள்ளது. இதன்மூலம் 5.12 லட்சம் மக்கள் பயனடைவர்.
இப்பணிகள் 71 சதவீதம் முடிந்துள்ளது. இது 2024ல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இப்பணிகளை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மாரியப்பன்,செயற்பொறியாளர் லட்சுமணன் ஆய்வு செய்தனர்.