/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடையை மீறி இறைச்சி விற்பனை:பறிமுதல்
/
தடையை மீறி இறைச்சி விற்பனை:பறிமுதல்
ADDED : ஏப் 22, 2024 04:19 AM
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தடையை மீறி பொது மக்களுக்கு விற்ற 42 கிலோ ஆட்டுக்கறி உள்பட கத்திகள், எடைக்கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகர் முழுவதும் தடையை மீறி இறைச்சி விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன.அதனடிப்படையில், மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜான் பீட்டர், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், மேற்பார்வையாளர்கள் சகாயம், பிரேம், சைமன்,போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 42 கிலோ ஆட்டுக்கறி, 67 கிலோ கோழிக்கறி, 10 வெட்டுக்கட்டைகள், 21வெட்டுக்கத்திகள், 12 சூரிகத்திகள், 10 எடை கருவிகள், 3 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.அதேபோல், சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.
பழநி: நகர் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் நேற்று இறைச்சி கடைகள் ,மது விற்பனை ஜோராக நடந்தது. அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருந்தனர். சட்டவிரோத மது விற்பனை நடந்தது.

