/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 10, 2024 05:40 AM
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புன்னபட்டி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:நத்தம் அருகே ஊராளிபட்டியில் மணிமுத்தாறு ஆறு உள்ளது. இதை பார்த்த என்னை சிலர் மிரட்டினர். தாடிக்கொம்பில் மண் அள்ள கனிமவளத்துறை வழங்கிய அனுமதியை பயன்படுத்தி மணிமுத்தாறு ,அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளுகின்றனர். உலுப்பக்குடி கருப்புகோவில் பகுதியில் கிராவல் மண் அள்ளுகின்றனர்.
கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி , தற்போதைய நிலை குறித்து கனிமவள உதவி இயக்குனர் ஆக. 30 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.