/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பாழாகும் சுகாதார வளாகங்கள்
/
பராமரிப்பின்றி பாழாகும் சுகாதார வளாகங்கள்
ADDED : ஆக 09, 2024 12:54 AM

மின்கம்பத்தில் செடிகள்
ஏ.வெள்ளோடு அருகே ஆணை விழுந்தான் ஓடை பகுதியில் மின்கம்பத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது இதோடு விபத்து அபாயமும் உள்ளது. இதன் செடிகொடிகளை அகற்ற வேண்டும். செல்வம், ஏ. வெள்ளோடு.
.........------தரைபாலம் சேதம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு பகுதி ரோடு தரைபாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதை அறிய குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் நிலைதடுமாறி பலரும் கீழே விழுகின்றனர். அஸ்வின், திண்டுக்கல்.
.......------சேதமான விளம்பர பேனர்
நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் எர்ரமநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள மெகா சைஸ் விளம்பரப் பேனர் சேதமடைந்த நிலையில் விபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. சேதமான விளம்பர பேனரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஹரிஹரன்,நத்தம்.
...........-------மூடியில்லாத போர்வெல்
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி சாமியார்மடம் பகுதியில் உள்ள போர்வெல் மூடி இல்லாமல் உள்ளது . பெரும் விபத்து ஏற்படும் முன் போர்வெல் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்.
.............--------குப்பையால் பாதிப்பு
திண்டுக்கல் -கரூர் ரோடு நான்கு வழிச்சாலை செல்லும் சர்வீஸ் ரோடு அருகே குவிந்துள்ள பிளாஸ்டிக் கலந்த குப்பையால் மண்வளத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது . குப்பை பல நாட்களாக அப்படியே அள்ளாமல் உள்ளது.இதனை அகற்ற வேண்டும் செந்தில்குமார், திண்டுக்கல்.
.........---
பாழாகும் சுகாதார வளாகம்
கொடைக்கானல் அப்பர்லேக் வியூ பகுதியில் நகராட்சி நிதியில் கட்டமைக்கப்பட்ட கட்டண சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயனற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிவசண்முகம், கொடைக்கானல்.
..............------சேதமான குடிநீர் தொட்டி
வடமதுரை தும்மலக்குண்டில் இருந்து திருக்கண் ரோட்டோரம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. சீரமைப்பு பணி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகவேல், வடமதுரை.
...............------