ADDED : ஆக 21, 2024 08:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு, : அமைதி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பால் பாஸ்கர் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தலைவர் ரூபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன், நிதிநிலை மேலாளர்கள் ஜெயா தாமஸ், சங்கீதா, ஜோஸ்வின் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார்.
திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் துவக்கி வைத்தனர். கவுன்சிலர் கணேசன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அண்ணாதுரை, ஜெகதீஸ்வரன், முன்னாள் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி, மாஸ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல், அமைதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, சங்கீதா, மணிமேகலை, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ரேணுகாதேவி பங்கேற்றனர்.