ADDED : ஆக 15, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக்., பள்ளி , லயன்ஸ் கிளப் ஆப் நத்தம் சிட்டி இணைந்து மரமே வரம் எனும் தலைப்பில் மாணவர்களுக்கு 500 மரக்கன்றுகள் கொடுத்து நடும் பழக்கத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ மீனாட்சி பள்ளியில் நடந்த இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். தாசில்தார் சரவணக்குமார் , லயன்ஸ் கிளப் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்
செயலாளர் அகமது அபுரார், பொருளாளர் எஸ்.டி.சுப்ரமணியன் ,இயற்கை ஆர்வலர் தேவா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மா, வேம்பு, நாவல், புங்கன் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் சத்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தாளாளர் ராஜ்குமார் , முதல்வர் சத்யா செய்திருந்தனர்.