/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வயல்களுக்கு பாதுகாப்பு வேலியான சேலைகள்
/
வயல்களுக்கு பாதுகாப்பு வேலியான சேலைகள்
ADDED : செப் 04, 2024 01:23 AM

வடமதுரை : வடமதுரை பகுதியில் மயில்களிடமிருந்து விளைபொருட்களை பாதுகாக்க விவசாயிகள் தங்கள் வயல்களில் சேலைகளை கட்டி வேலி அமைத்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன் வரை வடமதுரை புத்துார், பஞ்சந்தாங்கி மலைப்பகுதிகளில் மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையில் மயில்கள் காணப்பட்டன. தேசிய பறவையான மயிலை வேட்டையாடுவது குற்றம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தொந்தரவு தருவதில்லை. சில ஆண்டுகளில் வடமதுரையில் சமவெளி பகுதிகளிலும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவை பூச்சிகளை அதிகளவில் உண்பதால் விவசாயிகளுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. கூடவே நெல், சப்போட்டா, தக்காளி, வெண்டை என பல வகை காய், கனிகளை மயில்கள் உண்ணுவதால் விவசாயிகளுக்கு மகசூல் குறைவதாக ஆதங்கம் உள்ளது. பாதிப்பின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் வயலை சுற்றிலும் சேலை, துணிகளை கட்டி வேலி அமைத்துள்ளனர். இதனை கண்டு அச்சமடையும் மயில்கள் வயலை நெருங்குவதில்லை.