ADDED : மே 13, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: வேடசந்துார் எரியோடு தொட்டனம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் மனைவி சுசீலா 39.
இவருக்கும், இவரது கணவரின் அண்ணன் குமரவடிவேல் என்பவருக்கும், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது. நேற்று இரவு ஏற்பட்ட பிரச்னையில் குமரவடிவேல், தனது தம்பி மனைவி சுசீலாவின் கழுத்தில் வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுசீலா,திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.