/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெகிழி பை தயாரித்த நிறுனத்திற்கு சீல்
/
நெகிழி பை தயாரித்த நிறுனத்திற்கு சீல்
ADDED : மே 08, 2024 05:32 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் அருகே தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது
திண்டுக்கல் அடுத்த சாலையூர் என்.எஸ்.நகர்., பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உதயா, மேற்கு தாசில்தார் வில்சன், சீலப்பாடி வி.ஏ.ஓ., பால்பாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவு அரவை ஆலையின் மின்சாரத்தை பயன்படுத்தி தடை நெகிழிப் பைகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதற்கான கோடவுனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 2022 அக்டோபரில் இதே ஆலை நெகிழிப் பைகள் உற்பத்தி செய்வதை கண்டறிந்த அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர் அருகிலுள்ள மாவு அரவை ஆலையிலிருந்து மின்சாரத்தைப் பெற்று தொடங்கி உள்ளனர். தற்போது 2 வது முறையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு கோடவுனுக்கும் சீல் வைத்துள்ளனர்.

