/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 14, 2024 06:33 AM
திண்டுக்கல்: தேர்தலை முன்னிட்டு ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட மறுபயிற்சி வகுப்புகள் சட்டசபை தொகுதி வாரியாக நடந்தது.
மாவட்டத்தில் உள்ள 2121 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 10,473 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு சட்டசபை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். தேவையான அலுவலர்களைவிட 20 சதவீதம் கூடுதலாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மார்ச் 24 , 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப். 7 ல் நடந்தது. இந்நிலையில் 2ம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நேற்று நடத்தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்தல், ஓட்டுப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அஞ்சல் ஓட்டுச்சீட்டு உட்பட அனைத்து விதமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள் என அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து பயிற்சிகள் ஒலிஒளி அமைப்புடன் பயிற்சி அளிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

