/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என சமாதியில் சத்தியம் செய்வார்களா தி.மு.க., -அ.தி.மு.க., வுக்கு சீமான் கேள்வி

ADDED : ஏப் 03, 2024 05:15 AM
வடமதுரை : 'தேர்தலில் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கருணாநிதி சமாதியில் தி.மு.க.,வும், ஜெ., சமாதியில் அ.தி.மு.க.,வும் சத்தியம் செய்துவிட்டு களத்திற்குள் வருவார்களா''என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கரூர் தொகுதி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வடமதுரையில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது. இந்நிலையில் இதை 150 நாளாக மாற்றப்படும் என தி.மு.க.,வாக்குறுதி தருகிறது. இந்தியாவிலே பெரிய கட்சி நாம் தமிழர், திரிணாமுல் காங்., மட்டுமே. நாங்கள் மட்டுமே கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும் தனியே போட்டியிடுகிறோம். தி.மு.க., பெரிய கட்சி கிடையாது. மாநிலத்தில் இருக்கிற எல்லா கட்சிகளும் தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கிடக்கின்றன. கூட்டணி இல்லையெனில் எந்த தி.மு.க.,வினரும் போட்டியிட வர மாட்டார்கள். இதுபோல் அ.தி.மு.க.,-பா.ஜ., கட்சிகளிலும் பலர் கூட்டணி சேர்ந்து தான் போட்டியிடுகின்றனர். பெரிய கட்சி என்றால் தனியே போட்டியிடவேண்டும். இத்தேர்தலில் வாக்காளர்களது ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கருணாநிதி சமாதியில் தி.மு.க.,வும், ஜெ.,சமாதியில் அ.தி.மு.க.வும் சத்தியம் செய்துவிட்டு களத்திற்குள் வருவார்களா என்றார்.