ADDED : ஜூலை 07, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் துல்கருணை சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் ஹக்கீம் சேட் 45. இவர் அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மிட்டாய் வியாபாரம் செய்வதாக கூறி புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சரவணகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், ஜாபர் சாதிக் தலைமையிலான குழுவினர் நேற்று ஹக்கீம் சேட் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை.
வீடு முழுவதும் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆறு வகையான 300 கிலோ புகையிலை பொருட்கள் வீட்டின் மூலைகளில் பதுக்கியது தெரிந்தது.
புகையிலை பொருட்கள், அங்கிருந்த காரை பறிமுதல் செய்து வீட்டிற்கு சீல் வைத்தனர்.
தலைமறைவான ஹக்கீம் சேட், மீது குற்ற வழக்கு பதியப்பட்டது.