/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட ஹேண்ட்பால் அணி வீரர்கள் தேர்வு
/
மாவட்ட ஹேண்ட்பால் அணி வீரர்கள் தேர்வு
ADDED : செப் 14, 2024 05:31 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதல்வர் கோப்பை மாவட்ட ஹேண்ட்பால் போட்டியில் மாநில போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஹேண்ட்பால் போட்டி சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் செப். 11ல் துவங்கின. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக தனித்தனி பிரிவுகளில் போட்டி நடந்தது.
பள்ளி மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் பிருந்தாவன் முதலிடம், அவர்லேடி 2ம் இடம், சித்தையன்கோட்டை சேரன் குளோபல் 3ம் இடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் எம்.எஸ்.பி., பள்ளி முதலிடம் , சேரன் வித்யாலயா2ம் இடம், சேரன் ஹேண்ட்பால் கிளப் 3 ம் இடம் பிடித்தன.
கல்லுாரி மாணவியர் பிரிவில் திண்டுக்கல் பான்செக்கர்ஸ் முதலிடம்,பி.எஸ்.என்.ஏ., பி அணி 2ம் இடம், ஜி.டி.என்., கல்லுாரி ஏ அணி 3ம் இடம் பெற்றன.
மாணவர்கள் பிரிவில் ஜி.டி.என்., கல்லுாரி ஏ அணி முதலிடம், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி ஏ அணி 2ம் இடம், ஜி.டி.என்., கல்லுாரி பி அணி3ம் இடம் பிடித்தன. தலா 14 வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கோப்பைக்காண மாவட்ட ஹேண்ட்பால் போட்டிகள் நடந்தது.
ஹேண்ட்பால் கழக மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திலகம், ஹேண்ட்பால் கழக மாவட்ட தலைவர் சமயநாதன், பொருளாளர் மகாதேவன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா வரவேற்றார்.
நேற்று நடந்த மகளிர் போட்டியில் ஜி.டி.என்., கல்லூரி அணியை, பான்செக்கர்ஸ் கல்லூரி அணி வென்றது. பி.எஸ்.என்.ஏ., கல்லூரி அணி புனித அந்தோனியார் கல்லூரி அணியை வென்றது.