/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தற்கொலை செய்ய முயன்ற சுய உதவி குழு பெண்கள்
/
தற்கொலை செய்ய முயன்ற சுய உதவி குழு பெண்கள்
ADDED : மார் 02, 2025 02:58 AM
ஆயக்குடி : திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே கோவிந்தாபுரம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கிய தலைவி தலைமறைவாக பாதிக்கப்பட்ட 5 பெண்கள் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயக்குடி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி 35, காந்திஅம்மாள் 50, செண்பகம் 45, அன்னதாய் 55, சித்ராதேவி 37.
இவர்கள் மகளிர் சுய உதவி குழுவில் உள்ளனர். இக்குழு தலைவியாக அப்பகுதியைச் சேர்ந்த ராதிகா 35, உள்ளார். இவர் 5 பெண்களின் பெயரில் மகளிர் குழுவுக்கு தனியார் வங்கி மூலம் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை பெற்ற ராதிகா தலைமறைவானார்.
ஐந்து பெண்களிடமும் வங்கியில் இருந்து கடனை திருப்பி செலுத்த கேட்டனர்.
இதனால் மனமுடைந்த ஐந்து பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.