ADDED : செப் 15, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8040 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த இதை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மோட்டார் வாகன விபத்து , காசோலை மோசடி என 8040 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ரூ.15 கோடி 93 லட்சத்து 36 ஆயிரத்து 737 நிவாரணமாக வழங்கப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி மீனாட்சி,நீதிபதிகள் மெகபூப் அலிகான், விஜயகுமார், கனகராஜ், தீபா, ரெங்கராஜ், ஆனந்தி, சவுமியா மாத்யூ, வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.