sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவுநீர்

/

சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவுநீர்

சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவுநீர்

சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவுநீர்


ADDED : பிப் 26, 2025 06:25 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்களால் அச்சம் : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.நாய்கள் கூட்டத்தை கண்டாலே அச்சுறுத்தலாக உள்ளதால் இதை கடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.

--மாரியப்பன்,ரவுண்ட் ரோடு.

சாக்கடையில் அடைப்பு : நிலக்கோட்டை ஐயப்பன் கோயில் தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.சுகந்தி,நிலக்கோட்டை.

குப்பையால் சுகாதாரக்கேடு : பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெரு கார்த்திக் வித்யாமந்திர் பள்ளி அருகே குப்பை குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை கடந்து செல்லும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

-வசந்தி, பழநி.

ரோடு சேதத்துடன் பள்ளம் : திண்டுக்கல் வத்தலகுண்டு ரோடு குட்டியபட்டி பிரிவு அருகே ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதை மறைக்க பேரிக்காடு வைத்துள்ளனர். இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும்.

-எம்.யாசர் அரபாத், திண்டுக்கல்.

சேதமான சமுதாயகூடம் : நிலக்கோட்டை விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள சமுதாயகூடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது .விபத்து ஏற்படும் முன் இதை சரிசெய்ய வேண்டும்.

-சி.அய்யர்பாண்டி, முத்தாலபுரம்.

வீதியில் கழிவு நீர் தேக்கம் : குல்லலகுண்டு ஊராட்சி பொட்டிசெட்டி பட்டி அரண்மனை தெரு 1வது வார்டு வீதியில் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தனி நபரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்கு சாக்கெடை அமைக்க வேண்டும்.

-ராம்குமார், குல்லலகுண்டு.

மின்கம்பத்தால் விபத்து : வடமதுரை அரசு மகளிர் விடுதி எதிர்புறம் முத்து நகர் ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்து விபத்து ஆபத்துடன் உள்ளது. காங்ரீட் கம்பிகளும் வெளியில் தெரிவதால் எப்போதும் விழும் நிலையில் உள்ளது.இதனை சீரமைக்க வேண்டும். ---சந்திரசேகர்,வடமதுரை.






      Dinamalar
      Follow us