/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்
/
சாக்கடை அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்
ADDED : ஆக 21, 2024 08:38 AM

ஆறாக ஓடும் கழிவு நீர்
திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ேஹால் வழியாக கழிவு நீர் ஆறாக ஓடுகிறது .இதனால் துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் இதை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்..............-------தாழ்வான மின்பெட்டி
பழநி பஸ் ஸ்டாண்ட் வேல் ரவுண்டானா அருகில் மின்கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி தாழ்வாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .மீட்டர் பெட்டியை மேலே உயர்த்தி வைக்க மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்தி, பழநி.............-------பள்ளத்தால் விபத்து
வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் பாலகிருஷ்ணாபுரம் அருகில் ரோட்டில் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். --- ராமசாமி, வடமதுரை.
.................-------காலியிடங்களில் மழைநீர்
திண்டுக்கல் பர்மா காலனி பகுதியில் காலியிடங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் அப்படியே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் தண்ணீர் கடந்து செல்ல நடவடிக்கை வேண்டும் .விஜயகுமார், திண்டுக்கல்.
.................-------தொட்டியில் இல்லை தண்ணீர்
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் இன்றி உள்ளது .இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். குடிநீர் தொட்டியில் தண்ணீர் எப்போது இருக்கும் படி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னச்சாமி, ஒட்டன்சத்திரம்.
...........------கால்வாயில் குப்பை
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் மழை நீர் கால்வாயில் குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பல நாட்களாக அள்ளாமல் அப்படியே உள்ளது .குப்பையை முறையாக அகற்ற வேண்டும். குமரன், திண்டுக்கல்.
..............------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் ரயிலடி ரோட்டில் இருந்து சந்தை ரோடு வரை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது .மழை நேரங்களில் பொதுமக்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது .சாக்கடையை துார்வார வேண்டும். வீரப்பன், திண்டுக்கல்.
...............