/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு ஆயுள்
/
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு ஆயுள்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு ஆயுள்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : ஆக 28, 2024 08:43 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி பிச்சைமுத்து ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் நிலக்கோட்டை விருவீடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிச்சைமுத்து 38. இவர் 2024 மே மாதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பிச்சைமுத்து வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமியை பிச்சைமுத்து, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
சிறுமியின் பெற்றோர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிச்சை முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போகோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வேல்முருகன், குற்றவாளி பிச்சைமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.