/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நர்சுக்கு பாலியல் சீண்டல்; அரசு டாக்டர் கைது
/
நர்சுக்கு பாலியல் சீண்டல்; அரசு டாக்டர் கைது
ADDED : மே 13, 2024 07:44 AM

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் ஜி.தும்மலப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் பிரிவில் பணிபுரியும் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சீனிவாசன் 28. இவர் ஜி.தும்மலப்பட்டி, மல்லணம்பட்டி சுகாதார நிலையங்கள் பொறுப்பு டாக்டராகவும் உள்ளார்.
தும்மலப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் பிரிவில் 31 வயது நர்ஸ் ஒருவர் பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ஓராண்டாக கணவரை பிரிந்து வாழ்கிறார். அரசு டாக்டர் சீனிவாசனுக்கும் நர்சுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நர்ஸ் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வத்தலக்குண்டு போலீசார் நர்சிடம் விசாரித்த போது டாக்டர் சீனிவாசன் திருமணம் செய்வதாக கூறி பாலியல் சீண்டல் செய்ததாக தெரிவித்தார். சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.