ADDED : மே 11, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துனர்.
தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் நத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் மழை கொட்டி தீர்த்தது.
நத்தம், கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான வத்திபட்டி, கோவில்பட்டி, சமுத்திராப்பட்டி, உலுப்பகுடி, வத்திபட்டி, பரளி, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரங்களுக்கு மேலாக கனமழை கொட்டியது.
இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.