ADDED : ஜூலை 27, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு, : கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் சேகர்.
நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு ஸ்டேஷனிற்கு சென்றவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வத்தலக்குண்டு வீட்டில் இருந்த அவரது உடலுக்கு எஸ்.பி., பிரதீப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது போல் கொடைக்கானல் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.