/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பஞ்சம்பட்டியில் முற்றுகை; மறியல்
/
என்.பஞ்சம்பட்டியில் முற்றுகை; மறியல்
ADDED : ஏப் 14, 2024 06:39 AM
சின்னாளபட்டி: என்.பஞ்சம்பட்டியில் இருந்து வேறு ஊராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியை கண்டித்து ஊராட்சி அலுவலக முற்றுகை, ரோடு மறியல் நடந்தது.
ஆத்துார் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் இருந்து பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் சில வாரங்களாக நடந்தது. இதற்கான குழாய் பதிக்கும் பணியின்போது உள்ளூர் வினியோக பணி என பதிலளிக்கப்பட்டது. நேற்று பிள்ளையார்நத்தம் பகுதிக்கான இணைப்பு நடந்த சூழலில் இப்பகுதியினர் ஆவேசமடைந்தனர். ஊராட்சி அலுவலகத்தை முற்றுவிட்டு கோஷங்கள் எழுப்பினர். நடுரோட்டில் படுத்து மறியல் செய்தனர். பி.டி.ஓ, அருள்கலாவதி பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.

