/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து
/
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து
ADDED : மார் 08, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : மும்மொழி கொள்கையை ஆதரித்து ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. ஒன்றிய தலைவர் கே.பி. சதீஷ் தலைமை வகித்தார்.
ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எம்.குமரேசன், பி. வரதராஜ் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் கே.ரவிச்சந்திரன், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்திரமூர்த்தி, மண்டல் துணை தலைவர் மூர்த்தி, மண்டல் செயலாளர் கே.ஈஸ்வரன் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்மொழி கொள்கையை வரவேற்று கையெழுத்திட்டனர்.