/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் விரைவு நடை போட்டி
/
ஒட்டன்சத்திரத்தில் விரைவு நடை போட்டி
ADDED : நவ 13, 2024 05:39 AM

ஒட்டன்சத்திரம் : உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவ கழகம் கிளை ,வாக்கிங் கிளப் சார்பில் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு விரைவு நடை போட்டி நடந்தது.
வாக்கிங் கிளப் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன் முன்னிலை வகித்தார்.
வழக்கறிஞர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஐ.எம்.ஏ., கிளை செயலாளர் ஆசைத்தம்பி பேசினார். வேலு டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் சுப்பிரமணியம் முதல் பரிசு , பேராசிரியர் ரவிச்சந்திரன் 2ம் பரிசு , தலைமை ஆசிரியர் நடராஜன் 3ம் பரிசை பெற்றனர். டி.எஸ்.பி, கார்த்திகேயன், ஐ.எம்.ஏ., கிளை துணைத் தலைவர் முத்துச்சாமி பரிசுகளை வழங்கினர். சன் சட்டில் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், வாக்கிங் கிளப் துணை ஒருங்கிணைப்பாளர், போஸ்தங்கராஜ், நேச்சுரல் டிரஸ்ட் சேர்மன் பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் குமரவேல் நன்றி கூறினார்.

