/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி டூ திருப்பதிக்கு ஆன்மிக பயணம்; சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
/
பழநி டூ திருப்பதிக்கு ஆன்மிக பயணம்; சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
பழநி டூ திருப்பதிக்கு ஆன்மிக பயணம்; சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
பழநி டூ திருப்பதிக்கு ஆன்மிக பயணம்; சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
ADDED : ஜூலை 06, 2024 06:07 AM
திண்டுக்கல் : ''ஆன்மிக சுற்றுலாத்தலமான பழநியிலிருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளதாக,'' திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இயக்கப்படும் இந்த பஸ் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு பழநியிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல் வழியாக சனிக்கிழமை காலை ராணிப்பேட்டை செல்லும்.
ராணிப்பேட்டை தமிழ்நாடு தங்கும் விடுதியில் சிறிது ஓய்வுக்கு பின் திருப்பதி செல்லும்.
அங்கு தேவஸ்தானம் விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலமாக தரிசனம் செய்யலாம். லட்டு ஒன்றும் வழங்கப்படும்.
மதிய உணவுக்கு பின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் முடிந்து ராணிப்பேட்டை ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகத்தில் இரவு உணவு வழங்கப்படும்.
மறுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் வழியாக பழநிக்கு பஸ் வரும்.
கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.4600, பெரியவர்களுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணத்திட்டத்திற்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.comல் முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களை 180042 531111, 0442 533 3333, 044 -253 33444 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.