/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையால் கழிவுநீர் தேக்கம்; பயன்பாடற்ற பூங்கா இடங்கள் ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் பாதிப்பு
/
சாக்கடையால் கழிவுநீர் தேக்கம்; பயன்பாடற்ற பூங்கா இடங்கள் ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் பாதிப்பு
சாக்கடையால் கழிவுநீர் தேக்கம்; பயன்பாடற்ற பூங்கா இடங்கள் ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் பாதிப்பு
சாக்கடையால் கழிவுநீர் தேக்கம்; பயன்பாடற்ற பூங்கா இடங்கள் ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் பாதிப்பு
ADDED : மே 04, 2024 06:37 AM

ஒட்டன்சத்திரம்: சாக்கடை குறுகலாக இருப்பதால் மழைகாலத்தில் கழிவுநீர் தேக்கம், பயன்பாடற்ற பூங்கா இடங்கள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் பாதிப்புகள் அதிகம் உள்ளன.
அண்ணா நகர்,சொசைட்டி காலனி, சம்சுதீன் காலனி, வீரசின்னம்மாள் கோயில் தெரு, திண்டுக்கல் பழநி ரோடு தெற்குப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் அண்ணா நகர் பகுதியில்முறையாக சாக்கடை அமைக்காததால் கழிவுநீர் தேங்குகிறது. அண்ணாநகர், சம்சுதீன் காலனிபகுதிகளில் சில தெருக்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை காலத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ரோட்டை விட்டு தாழ்வாக உள்ள வீடுகளில் மழை நீர் புகுகிறது. இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை ஆழப்படுத்தி அகலப்படுத்தி மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். நகராட்சி பூங்காவிற்கு ஒதுக்கிய இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
சையது பாரி, வியாபாரி, சொசைட்டி காலனி: சொசைட்டி காலனி பகுதியில் மழைக்காலத்தில் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் தேங்கி இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. மழைநீர் தங்கு தடை செல்லும் வகையில் வடிகால் வசதியை மேம்படுத்தி இரண்டு சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளதால் தற்போது மழை நீர் தேங்குவதில்லை. இதன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கழிவுநீர் நீர் தேங்குவதால் பாதிப்பு
முகமது இஸ்மாயில், வியாபாரி ,சம்சுதீன் காலனி: சம்சுதீன் காலனி 2வது தெருவில் புதிதாக ரோடு போட்ட போது வீடு தாழ்வாகவும் ரோடு மேடகவும் மாறியது. இப்பகுதியில் சாக்கடை மிகவும் சிறிதாக இருப்பதால் கழிவுநீர் தேங்குகிறது. மழைக்காலத்தில் மழை நீர் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. இப் பிரச்னையை போக்க ஆழமாகவும் ,அகலமாகவும் வடிகால் அமைத்து கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை பிரச்னை இல்லை
முஜிப்பூர் ரஹ்மான், ஆட்டோ டிரைவர்: வார்டில் தேவையான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுளது. நகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் தினமும் குப்பை அள்ளி அப்புறப்படுத்தப்படுகிறது. தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது
கோரிக்கைகள் நிறைவேற்றம்
முகமது மீரான், கவுன்சிலர் (காங்.,) : சம்சுதீன் காலனி, சொசைட்டி காலனி பகுதிகளில் ரோட்டின் மேல் ரோடு போடாமல அரசு உத்தரவுப்படி ரோடு தோண்டப்பட்டு தார் ரோடு போடப்பட்டுள்ளது. சொசைட்டி காலனி பகுதியில் வடிகால் அகலப்படுத்தப்பட்டு இரு சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பரிந்துரையின் பேரில் சொசைட்டி காலனியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வார்டில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் எல்.இ.டி .,விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. பூங்கா இடங்களை பயன்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.