/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பைக்கு வரி போட்டவர்தான் ஸ்டாலின்: பழனிசாமி
/
குப்பைக்கு வரி போட்டவர்தான் ஸ்டாலின்: பழனிசாமி
ADDED : ஏப் 10, 2024 06:31 AM

திண்டுக்கல் : ''குடிநீருக்கு வரி போட்டார் சரி . ஆனால் குப்பைக்கும் வரி போட்டவர் முதல்வர் ஸ்டாலின்தான். ஆனால் இவர் வரியில்லாத பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்து மக்களை கேலி செய்கிறார் ,'' அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசினார்
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி .ஐ., வேட்பாளர் முகமது முபாரக் ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க.,வின் 38 எம்.பி.,க்களும் டெல்லி சென்று இருக்கைகளை தேய்த்ததுதான் மிச்சம். டீசல் விலையை ரூ.4 குறைக்க முடியாத ஸ்டாலின் 35 ரூபாய் குறைத்து 65 ரூபாய்க்கு தருவதாகவும், காஸ் சிலிண்டருக்கு ரு.500 மானியம் தருவதாகவும் புளுகு மூடைகளை அவிழ்த்து விடுகிறார்.
தேர்தல் பத்திரமாக ரு.656 கோடியை ஸ்டாலின் லஞ்சமாக பெற்றுள்ளார். உதயநிதி திண்டுக்கல் வந்தால் மூத்த அமைச்சர் பெரியசாமியை கூட மதிக்க மாட்டார். உள்ளூர் மக்களிடம் அமைச்சருக்கு இருக்கும் மதிப்பு உதயநிதியிடம் இருக்காது. சைக்கிள் ஓட்டவும், வலு துாக்கவும், டீ க்கடையில் டீ குடிப்பதுமாக ஸ்டாலின் பொழுதை போக்குகிறார்.
குடிநீருக்கு வரி போட்டால் சரி. ஆனால் குப்பைக்கும் வரி போட்டு விட்டார் ஸ்டாலின். ஆனால் சொல்வதோ வரியில்லாத பட்ஜெட்.
தி.மு.க., ஆட்சியில் துன்பப்படும் மக்களை பார்த்து நீங்கள் நலமா என ஸ்டாலின் கேட்ப நக்கல் அடிப்பதைப் போல் உள்ளது. கமிஷன், கரப்ஷன், கலெக் ஷன் இதுதான் தி.மு.க., ஆட்சியின் தாரக மந்திரமாகும்.
திண்டுக்கல்லுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தான் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். திண்டுக்கல் சித்தையன் கோட்டையை சேர்ந்த நாராயணசாமிக்கு இரண்டு கைகளை பொருத்தி மருத்துவ சாதனை புரிந்தது அ.தி.மு.க., ஆட்சியின் மருத்துவ சாதனையாகும். கஜா, வர்தா, தானே புயல்களை சமாளித்து மத்திய அரசின் உதவியை நாடாமல் பொருளாதாரத்தை நிலை நாட்டியது அ.தி.மு.க., ஆட்சியாகும். ஆனால் மிக்ஜாம் புயலுக்கே தி.மு.க., நிலைதடுமாறி தவித்து மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது.
இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் மாதத்தில் 5600 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி நோன்பு கஞ்சிக்காகவும், சந்தனக்கூடு தர்கா விழாவிற்கு சந்தன கட்டைகள் இலவசமாகவும், ஹஜ் புனித பயணத்திற்கு மாநில அரசு மானியமாக ரூ.15 கோடியாக உயர்த்தி தந்தது அ.தி.மு.க., ஆட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை நிராகரித்த தி.மு.க.,தான் சிறுபான்மையின் மக்களின் எதிரியாக உள்ளது என்றார்.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ,எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் முன்னிலை வகித்தனர்.

